சென்னை: தங்கம் விலை நேற்று காலையில் குறைந்து, மாலையில் அதிகரித்தது. தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 28ம் தேதி தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,840 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,09.280க்கு விற்பனையானது. 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால், தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில் நேற்று மீண்டும் தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதுவும் வாரத்தின் தொடக்க நாளான நேற்று காலை தங்கம் விலை சற்று குறைந்தது.
அதாவது, கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.13,600க்கும், பவுனுக்கு ரூ.480 குறைந்து ஒரு பவுன் ரூ.1,08,800க்கும் விற்பனையானது. இந்நிலையில் மாலையில் தங்கம் விலையில் திடீர் மாற்றம் காணப்பட்டது. அதாவது மாலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,770க்கும், பவுனுக்கு ரூ.1,360 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,10160க்கும் விற்பனையானது. வெள்ளி விலையில் நேற்று காலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.250க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.
மாலையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.255க்கும், கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து பார் வெள்ளி ரூ.2.55 லட்சத்துக்கும் விற்பனையானது. தங்கம் விலை காலையில் குறைந்து, மாலையில் அதிகரித்தது நகை வாங்குவோரை சற்று கலக்கமடைய செய்துள்ளது.
