- சென்னை மாவட்டம் மேலதிக
- சென்னை
- சென்னை மாவட்ட மேலதிக தேர்தல்
- சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடம்
- சென்னை மாநகராட்சி…
சென்னை: சட்டசபை தேர்தலில் மாற்றுதிறனாளிகள் வாக்களிக்க அனைத்து வசதிகளும் செய்யப்படும் என்று சென்னை மாவட்ட கூடுதல் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்களிப்பது குறித்த கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சென்னை மாநகராட்சி துணை ஆணையரும், கூடுதல் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கற்பகம் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் திமுக மாற்றுத்திறனாளிகள் அணி மாநிலத் தலைவரும், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் மாநிலத் தலைவருமான ரெ. தங்கம், டிசம்பர் 3 இயக்க மாநில துணை பொதுச் செயலாளர் பிரபு, மாற்றுத்திறனாளி சமூக நீதி இயக்கத்தின் மாநிலத் தலைவர் பி.சரவணன், வித்யாசாகர் சுமித்ரா, அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமை சங்க துணை செயலாளர் ஜெயக்குமார், நேந்திராலயா கோபி மற்றும் பல்வேறு சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் வர உள்ள சட்டப்பேரவை தேர்தலில் அமைக்கப்பட உள்ள வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகள் எவ்வாறு வாக்களிக்க வேண்டும், அவ்வாறு வாக்களிக்கும் போது அவர்களுக்கு வீல்சேர், சாய்தளம், உதவியாளருடன் சென்று வாக்களிக்கப்படவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அதிகாரிகளும் அதற்கான முன்னேற்பாடுகளும், பல்வேறு வசதிகளும் செய்து தரப்படும் என்று உறுதி அளித்தனர். இக்கூட்டத்தில், சென்னை மாவட்ட தேர்தல் கண்காணிப்பு குழு அரசு அதிகாரிகளும், பங்கேற்றனர்.

