×

பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி

நாமக்கல், பிப்.17: நாமக்கல்லில், இந்தியன் வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில், பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி, வரும் 20ம் தேதி  துவங்குகிறது.தொடர்ந்து 30 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.இதில், 35 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட உள்ளதால்,  முதலில் வரும் விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் இப்பயிற்சிக்கு குறைந்தபட்ச கல்வி தகுதி 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். 45 வயதுக்குள் இருக்கவேண்டும்.பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் வரும் 18ம் தேதிக்குள் விண்ணப் பங்களை, நாமக்கல் திருச்சிரோட்டில் உள்ள இந்தியன் வங்கி பயிற்சி நிறுவனத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு பயிற்சி நிறுவன  இயக்குனர் பிருந்தா தெரிவித்துள்ளார்.

Tags : women ,
× RELATED தாயுடன் தூங்கிய 6 மாத பெண் குழந்தை கடத்தல்: 24 மணி நேரத்தில் 2 பெண்கள் கைது