×

தூத்துக்குடியில் மூத்த குடிமக்களுக்கான வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி : தூத்துக்குடியில் மூத்த குடிமக்களுக்கான வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.தூத்துக்குடியில் உள்ள லிட்டில் சிஸ்டர்ஸ் முதியோர் இல்லத்தில் மூத்த குடிமக்களுக்கான வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் குருச்சந்திரன் தலைமையில், வாக்காளர் விழிப்புணர்வு ஒருங்கிணைப்பு அலுவலர் மற்றும் உதவி கலெக்டர் (பயிற்சி) புவனேஷ் ராம் முன்னிலையில் நடைபெற்றது.

லிட்டில் சிஸ்டர் முதியோர் இல்லத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் தேர்தல் விழிப்புணர்வு கோலங்களை வரைந்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து, லிட்டில் சிஸ்டர் முதியோர் இல்லத்தில் 85 வயதுக்கு மேல் நடக்க முடியாத நிலையில் உள்ள முதியோர்கள் தபால் வாக்குகள் மூலம் வாக்களிப்பதற்கான 12டி படிவத்தினை மாவட்ட வருவாய் அலுவலர் குருச்சந்திரன், வாக்காளர் விழிப்புணர்வு ஒருங்கிணைப்பு அலுவலர் மற்றும் உதவி கலெக்டர் (பயிற்சி) புவனேஷ் ராம் ஆகியோர் முதியோர்களிடம் வழங்கினார். மேலும், அங்குள்ள மூத்த குடிமக்களிடம் வாக்காளர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தொடர்ந்து, ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரி மாணவியர்கள் மூலம் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வாக்காளர் விழிப்புணர்வு நடனம், நாடகம் மற்றும் பாடல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் அங்கன்வாடி பணியாளர்கள் தேர்தல் விழிப்புணர்வு பாடல்களை பாடினார்கள்.

மாவட்ட வருவாய் அலுவலர் குருச்சந்திரன் தலைமையில் அனைவரும் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர். இறுதியாக, லிட்டில் சிஸ்டர் முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள மூத்த குடிமக்களாகிய நாங்கள் அனைவரும் தவறாமல் வாக்களிப்போம். அதேபோல், பொதுமக்களாகிய நீங்களும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் செல்வி பிரேமலதா, திட்ட அலுவலர் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் காயத்திரி, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர், தூத்துக்குடி நகர்ப்புறம் ரூபி பெர்னாண்டோ, லிட்டில் சிஸ்டர் முதியோர் இல்லம், சிஸ்டர் அன்ட்எலிசபெத், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Thoothukudi ,Little Sisters Old Age Home ,District Revenue Officer ,Guruchandran ,Voter Awareness Coordination Officer ,
× RELATED வேட்புமனு தாக்கல் செய்யும் போது,...