×

100 சதவீதம் வாக்களித்திடும் வகையில் மகளிர் அமைப்பினர் தேர்தல் விழிப்புணர்வு கோலப்போட்டி

*மாவட்ட தேர்தல் அலுவலர் தொடங்கி வைத்தார்

புதுக்கோட்டை : இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, ‘தேர்தல் திருவிழா தமிழகத்தின் பெருவிழா” தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 தொடர்பாக, 180-புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி, மாவட்ட விளையாட்டரங்கில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு (மகளிர் திட்டம்) சார்பில், 100 சதவீதம் வாக்களித்திடும் வகையில் வாக்காளர்களிடையே பல்வேறு விழிப்புணர்வுகளை, மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட கலெக்டர் அருணா, நேற்று துவக்கி வைத்து, வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு 100 சதவீதம் வாக்களித்திடும் வகையில் வாக்காளர்களிடையே பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் 180-புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 1,09,962 ஆண்வாக்காளர்கள், 1,13,943 பெண் வாக்காளர்கள் மற்றும் 23 மூன்றாம் பாலினத்தவர்கள் சேர்த்து மொத்தம் 2,23,928 வாக்காளர்களிடையே 100 சதவீதம் வாக்களித்திடும் வகையில் பல்வேறு விழிப்புணர்வுகள் நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.

அதன்படி, 180-புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி, மாவட்ட விளையாட்டரங்கில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு (மகளிர் திட்டம்) சார்பில், 100 சதவீதம் வாக்களித்திடும் வகையில் தேர்தல் கலைநிகழ்ச்சி, தேர்தல் விழிப்புணர்வு குறித்த கோலப்போட்டியினை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட கலெக்டர் அருணா, துவக்கி வைத்து, வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்நிகழ்வில், தேர்தல் நடத்தும் அலுவலர், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரகாஷ், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பாலசுந்தரம், புதுக்கோட்டை மாநகராட்சி ஆணையர் நாராயணன், வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் செல்வம், புதுக்கோட்டை வட்டாட்சியர் செந்தில்குமார், மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags : District Election Officer ,Pudukkottai ,Election Commission of India ,Election Festival ,Tamil Nadu ,Tamil Nadu Legislative Assembly General Election 2026 ,Pudukkottai Legislative Assembly Constituency ,Tamil Nadu State Rural Livelihood Movement ,
× RELATED நவரை பட்டத்தில் அறுவடை மும்முரம் நெல்...