×

ஈரோட்டில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 9 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் 6ம் தேதி வருகை

ஈரோடு, மார்ச் 27: ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 9 கம்பெனியை சேர்ந்த துணை ராணுவ வீரர்கள் வருகிற ஏப்ரல் 6ம் தேதி வருகை தர உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை பாதுகாப்பாகவும், அமைதியாகவும் நடத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், மாவட்டத்தில் உள்ள 2,379 வாக்குச்சாவடிகளில் 77 பதட்டமானவையாக கண்டறியப்பட்டு, அங்கு கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக ஏற்கனவே துணை ராணுவ வீரர்களான ஒன்றிய தொழிற்பாதுகாப்பு படையை சேர்ந்த 90 பேர் வந்துள்ளனர். இவர்களுடன் இணைந்து போலீசார் 8 சட்டமன்ற தொகுதிகளிலும் கொடி அணிவகுப்பு நடத்தி உள்ளனர்.  தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்திற்கு 8 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், ஒரு கம்பெனியை சேர்ந்த துணை ராணுவ வீரர்கள் ஏப்ரல் 6ம் தேதியும், மீதமுள்ள 7 கம்பெனியை சேர்ந்த துணை ராணுவ வீரர்கள் ஏப்ரல் மாதம் 14ம் தேதியும் வருகை தர உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Tags : Erode ,Erode district ,
× RELATED அந்தியூரில் கலைநிகழ்ச்சிகள் மூலம் 100...