×

கல்லக்குடி பேரூராட்சியில் 100% வாக்களிக்க விழிப்புணர்வு பிரசாரம்

லால்குடி, மார்ச் 27: திருச்சி மாவட்டம், லால்குடி அருகே கல்லக்குடி பேரூராட்சி அலுவலகம் முன் வாக்காளர்கள் வாக்களிக்களிப்பின் அவசியம் குறித்தும், 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தியும் மனித சங்கிலி, விழிப்புணர்வு பேரணி, ரங்கோலி கோலம் வரைதல் மற்றும் எனது வாக்கு, எனது உரிமை, நமது கடமை வாசகம் அடங்கிய பதாகைகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வு மூலம் வாக்காளர்களை கவரும் வகையில் பிரசாரம் நேற்று நடைபெற்றது.

கல்லக்குடி செயல் அலுவலர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் பேரூராட்சி அலுவலர்கள் செந்தமிழ் செல்வன், குமார், சம்பத், அருண்பாண்டியன் புஷ்பா உள்ளிட்ட அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மை பரப்புரையாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

 

Tags : Kallakudi Town Panchayat ,Lalgudi ,Kallakudi Town ,Panchayat ,Trichy ,
× RELATED மண்ணச்சநல்லூர் அருகே வாகன சோதனையில் ரூ.1,33,500 பறிமுதல்