×

ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 80 கிலோ கடலை மூட்டை ரூ.9,350க்கு விற்பனை

ஜெயங்கொண்டம், மார்ச் 27: ஜெயங்கொண்டம்-திருச்சி சாலையில் இயங்கி வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடலை, எள் உள்ளிட்ட பல பொருட்களை விவசாயிகள் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இந்நிலையில், நேற்று ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், கடலை 80 கிலோ கொண்ட மூட்டைகள் 350ம், எள் 80 கிலோ கொண்ட மூட்டைகள் 150ம் வரப்பெற்றன.

இதில், கடலை மூட்டை ஒன்று அதிகபட்ச விலையாக ரூ.9,350ம், குறைந்தபட்ச விலையாக ரூ 6805க்கும் விலை போனது. எள் 80 கிலோ கொண்ட ஒரு மூட்டை அதிகபட்ச விலையாக ரூ. 11,325 ஆகவும், குறைந்தபட்ச விலையாக ரூ.6050க்கும் விலை போனது. சராசரி விலையாக கடலை மூட்டை ஒன்றுக்கு ரூ. 8,465 க்கும், எள்ளு மூட்டை ஒன்றுக்கு ரூ.10602க்கும் விற்பனையானது.

 

Tags : Jayankondam ,Jayankondam-Trichy road ,
× RELATED செட்டிகுளம் தண்டாயுதபாணி கோயிலில் சுவாமி திருவீதியுலா