×

18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்

பெரம்பலூர், மார்ச் 25: வருகிற ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் பொது பார்வையாளர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றார்.

அதனடிப்படையில், பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் பொதுபார்வையாளர் நேகா பன்சால் நேற்று (24ஆம்தேதி) பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாரண மங்கலம், விஜயகோபாலபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாக்குச்சாவடி மையங்களில் அமைக்கப் பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் கலந்துரையாடிய தேர்தல் பொதுப்பார்வையாளர் அவர்கள், 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும், வாக்கு என்பது உங்கள் அடிப்படை உரிமை. வெளிப்படையான, நேர்மையான தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது எனவே, உங்கள் உரிமையை, கடமையை கண்டிப்பாக வருகிற ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி நடைபெறும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் உங்கள் வாக்கை செலுத்தி ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

 

Tags : Perambalur ,Tamil Nadu Legislative Assembly General Election ,Kunnam Legislative Assembly ,
× RELATED அரியலூர் நகராட்சியில் ரூ.18.20 கோடியில் குடிநீர் திட்ட மேம்பாட்டு பணிகள்