×

ஆண்டிமடம் அருகே வரதராஜன்பேட்டையில் வாக்காளர் உதவி எண் வடிவில் நின்று கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு

ஜெயங்கொண்டம், மார்ச் 27: ஆண்டிமடம் வட்டம் வரதராஜன்பேட்டை ஞானம்மா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் தலைமையில் 100% வாக்களிப்பது தொடர்பாக ரங்கோலி கோலமிட்டும் மற்றும் வாக்காளர் உதவி எண் 1950 என்ற வடிவில் நின்றும் கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர், மாணவிகள் 200 பேர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உடையார்பாளையம் வட்டாட்சியர் ஆனந்தவேல், ஆண்டிமடம் வட்டாட்சியர் சுசீலா , ஆண்டிமடம் தலைமையிடத்து துணை வட்டாட்சியர், ஜெயங்கொண்டம் மற்றும் ஆண்டிமடம் வட்ட வழங்கல் அலுவலர்கள், குறுவட்ட அளவர், வருவாய் ஆய்வாளர், ஆண்டிமடம் குறுவட்ட கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

Tags : Varadharajanpet ,Andimadam ,Jayankondam ,Assembly Constituency ,Officer ,Udayarpalayam Revenue ,Commissioner ,
× RELATED கஞ்சா பறிமுதல்