×

உங்களால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் நீங்கள் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்கிறேன்: விஜய்க்கு பொன்ராஜ் நிபந்தனை

சென்னை: அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘‘நடிகர் விஜய் அவர்களே! ஆதாய‌ சூதாடி‌ நீங்களா? நானா? உங்களை தலைவன் என்று நேசிக்கிற பெண்களில் சில பேர் ஊடகங்களில் தரம் தாழ்ந்து, அக்காவா இருப்போம், தங்கச்சியா இருப்போம், விஜய்க்கு பெண்டாட்டியா கூட இருப்போம் என்று பொது வெளியில் பேசியதை கண்டித்து திருத்தாமல் அதை ரசித்துக்கொண்டிருந்த நீங்கள் ஆதாய அரசியல் சூதாடியா, நானா? எனக்கு என்‌ புருஷனை விட விஜய்தான் பிடிக்கும் என்ற பெண்மணியை கண்டித்து திருத்தாமல்,

ரசித்து கொண்டிருந்த நீங்கள் அரசியல் ஆதாய‌ சூதாடியா, நானா? குப்பை கூட்டுறவ கூட நாலு புருஷன் வச்சிருக்கான்னு ஒரு மாணவி பேசி பின்னர் செயலுக்கு வருத்தம் தெரிவித்தாரே, அதை கூட ரசித்துக்கொண்டிருந்த நீங்கள் அரசியல் ஆதாய‌ சூதாடியா, நானா? உங்களை அரசியல் ரீதியாக நான்‌ செய்யும் விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வக்கில்லாமல், எதற்கெடுத்தாலும் திமுக பின்னால் இருக்கிறது என்று திமுக போபியா பிடித்து அலையும் நீங்கள் அரசியல் ஆதாய சூதாடியா, நானா? இன்று காலையில் இருந்து இப்போது வரை நூற்றூக்கணக்கான மிரட்டல் கால்கள், சமூக வளைத்தளத்தில், வாட்ஸ்அப்பில் என்னையும், என் குடும்பத்தையும் இழிவாக, தரக்குறைவாக பேசி திட்டுவதற்கு தான் வெர்சுவல் வாரியர்களை உருவாக்கி வைத்திருக்கிறீர்களா? என்ன ஒரு‌ இழி நிலைக்கு இறங்கி இருக்கிறீர்கள்.

அரசியலில் நான்‌ கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல வக்கு இல்லை‌ என்றால் இப்படியா வசை பாடுவது. நான்‌ பெண்களை எப்போதும் கண் போல போற்றுபவன். உங்களை போல் வீட்டில், சினிமாவில், உங்கள் கட்சியில் பெண்களை அவமரியாதையாக நடத்திவிட்டு, அரசியலில் பெண்ணை போற்றுபவன் போல் நடிப்பவன் அல்ல. எந்த பெண்ணையும் அது உங்கள் ரசிகையாக இருந்தாலும் இழிவுபடுத்தும் நோக்கம் எனக்கு இல்லை.

ஆனால், பொது வெளியில் காலாச்சார சீர்கேட்டை உருவாக்கும் சில நாதாரிகள் பெண்களாக, உங்கள் ரசிகர்களாக, இருந்தாலும், I will call spade as spade. எனவே எனக்கு பாடம் எடுக்கும் முன்பு, நீங்கள் பெண்ணை மதித்து போற்ற கற்றுக்கொள்ளுங்கள், உங்களுக்காக காயம்பட்டு, உயிர் நீத்த இளைஞர்களின் குடும்ப பெண்களிடம் மன்னிப்பு‌ கேளுங்கள். உங்கள் கட்சி பெண்களுக்கு உங்கள் கட்சி ஆட்களால் இழைக்கப்படும் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டு பேட்டி கொடுத்த பெண்களிடம் மன்னிப்பு கேளுங்கள்.

உங்களை பார்க்க வந்து காரை மறித்து நியாயம் கேட்ட உங்கள் கட்சிக்கார பெண்ணை உங்கள் காரில் இடித்து தள்ளிவிட்டு சென்றதற்கு மன்னிப்பு கேளுங்கள். இதை முதலில் நீங்கள் செய்தால், நானும் என் சொல்லால் காயம் பட்ட பெண்ணிடம் மன்னிப்பு கேட்கிறேன். மீண்டும் சொல்கிறேன், நான்‌ எந்த பெண்ணையும் பொதுவாக அவதூறு சொல்லவில்லை, அப்படி சொல்லவும் மாட்டேன். எனவே தொடர்ந்து அலைபேசி மிரட்டல் தொடர்ந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.

Tags : Bonraj ,Vijay ,Chennai ,Twitter ,Abdul Kalam ,Vijay Alas ,Akawa ,Tangachia ,
× RELATED ஒரே கூட்டணியில் இருப்பதால் சமரசம்...