×

பெரம்பூர் தொகுதியில் நாளை விஜய் பிரசாரம் அசம்பாவிதம் நிகழாமல் பாதுகாப்பு வழங்க காவல்துறை ஆலோசனை

சென்னை: பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் தவெக தலைவர் விஜய் நாளை தேர்தல் பிரசாரம் செய்ய உள்ள நிலையில், அசம்பாவிதங்கள் நிகழாமல் பாதுகாப்பு வழங்குவது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் தவெக தலைவர் விஜய் தனது முதல் தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளார். இதற்காக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முறையாக அனுமதி கேட்டு தவெக சார்பில் மனு அளிக்கப்பட்டது.

இதற்கு காவல்துறை வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளோடு தேர்தல் அலுவலர் அனுமதி அளிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் தொடங்கி கொளத்தூர், வில்லிவாக்கம், அண்ணாநகர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் விஜய் பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வியாசர்பாடி முல்லை நகர் பகுதியில் விஜய் பேசுவது என்று முடிவு செய்யப்பட்டு அந்தப் பகுதியில் 3,000 பேர் கூடுவார்கள் என தவெக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அந்த இடத்தில் அதிகப்படியான நபர்கள் வந்தால் அந்த இடம் பாதுகாப்பாக இருக்குமா என்று காவல்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக, கூடுதல் கமிஷனர், இணை ஆணையர், புளியந்தோப்பு துணை கமிஷனர் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் நேற்று ஆலோசனை நடத்தினர்.

கரூர் சம்பவம் போன்று எந்தவிதமான அசம்பாவிதமும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் போலீசார் முழு கவனம் செலுத்தி வருகின்றனர். மேலும் தவெக சார்பில் ரோடு ஷோவுக்கு அனுமதி கேட்டதாகவும் ஆனால் தேர்தல் அதிகாரிகள் சார்பில் ரோடு ஷோவுக்கு யாருக்கும் அனுமதி கிடையாது என்று கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags : Vijay ,Perambur ,Chennai ,TDP ,
× RELATED புதிய வாக்காளராக சேர்வதற்கு 6.48 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன