- STBI
- MJK
- முக்குலத்தோர் புலிப்படை
- தமிழ்தேசம் கட்சி
- திமுக
- சென்னை
- மு.கே ஸ்டாலின்
- எஸ்.டி.பி.ஐ கட்சி
- மனிதமான ஜனநாயக
சென்னை: திமுக தலைமையிலான கூட்டணியில் முக்குலத்தோர் புலிப்படை, தமிழ் தேசம் கட்சி, எஸ்.டி.பி.ஐ கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதுகுறித்து திமுக தலைமை வெளியிட்ட அறிக்கை: தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ்,
தமிழர் தேசம் கட்சியின், நிறுவனர், தலைவர் கே.கே.செல்வகுமார், எஸ்.டி.பி.ஐ கட்சி தமிழ்நாடு தலைவர் வி.எம்.எஸ்.முகமது முபாரக், மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி போட்டியிடும் தொகுதி குறித்து திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கலந்து பேசியதில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்த கட்சிகள் தலா ஒரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதை தொடர்ந்து முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் நிருபர்களிடம் கூறியதாவது: எங்களுக்கு ஒரு தொகுதி ஒதுக்கியதற்கு திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் 5 தொகுதிகள் கொடுத்துள்ளோம், அதில் எந்த தொகுதி என்பது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு பண்ணி அறிவிப்பார். தமிழ்நாட்டில் கலைஞர் காலத்தில் கூட இத்தனை கட்சிகள் கூட்டணியாக ஒன்று இணைத்திருப்பார்களா என்று தெரியவில்லை.
முக்குலத்தோர் புலிப்படை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது என்றார். மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி நிருபர்களிடம் கூறியதாவது: மனித நேய ஜனநாயக கட்சிக்கு முதல்வர் முடிவு செய்து ஒரு தொகுதி ஒதுக்கியுள்ளார், முதல்வர் நல்வாழ்த்துகள் தெரிவித்து, எங்களை வருக, வருக, வருக என்று மூன்று முறை உற்சாகமாக அழைத்தார்.
எந்த தொகுதி என்பதை முதல்வர் இன்று அறிவிப்பார், முதல்வர் அறிவிக்கக்கூடிய எந்த தொகுதியாக இருந்தாலும் ஏற்றுக் கொண்டு களமாடுவோம். தமிழர் தேசம் கட்சி தலைவர் கே.கே.செல்வக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தமிழர் தேசம் கட்சி போட்டியிடுவதற்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் வெற்றிக்காக பாடுபடுவோம். இவ்வாறு கூறினர்.
