×

மாம்பழம் சின்னம் வழங்குவது தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமான நடவடிக்கை: ராமதாஸ் கண்டனம்

சென்னை: மாம்பழம் சின்னம் வழங்குவது தொடர்பாக பாமக தலைவர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: என்னால் வளர்க்கப்பட்டவர்கள், என்னை புறந்தள்ளி கட்சியை அபகரிக்கும் நோக்குடன் செயல்பட்டு, போலியான ஆவணங்களை உருவாக்கி, வளர்த்த கட்சியை அபகரிக்கத் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர். பாட்டாளி மக்கள் கட்சியின் சின்னத்தை அவர்களுக்கு வழங்கக்கூடாது என்று டெல்லி உச்சநீதிமன்றத்தில் முறையிட்டதன் பேரில் அன்புமணிக்கு எந்த அடிப்படையில் மாம்பழம் சின்னத்தை வழங்கினீர்கள் என்று டெல்லி உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்தை கேள்வி எழுப்பியதுடன், 3 நாட்களில் சென்னை உரிமையியல் நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கூறியது. ஆனால் தேர்தல் ஆணையமோ பாரபட்சமாக, ஒருதலைபட்சமாக, கட்சியை அபகரிக்க நினைப்பவர்களுக்கு ஆதரவாக உரிமையியல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக முடிவெடுத்திருப்பது ஜனநாயக படுகொலையாகும். தேர்தல் ஆணையம் தனது முடிவை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Election Commission ,Ramadoss ,Chennai ,PMK ,
× RELATED தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம்...