மயிலாடுதுறையில் 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கார், வேன், ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை, பிப்.17: மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு கார், வேன், ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல், காஸ், விலை உயர்வை கண்டித்தும், 15 ஆண்டுகளுக்கு மேல் உள்ள வாகனங்களை இயக்க தடை சட்டத்தை எதிர்த்தும், முறைசாராத நல வாரியத்தை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் ராமானுஜம் சிறப்புரையாற்றினர், இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

Related Stories:

>