தோகைமலை கடைவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தோகைமலை, பிப். 17: தோகைமலையில் பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சிகளின் கோரிக்கையை ஏற்று கடைவீதி பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. தோகைமலை கடைவீதியில் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து சாலை 10 அடிக்குள் சுருங்கிவிட்டது. இதனால் கோயில் விழா காலங்களில் பொதுமக்களுக்கும் வாகனங்களுக்கும் மிகுந்த இடையூறாக வீதிகள் இருந்தது. இதனால் தோகைமலை கடைவீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்களும், பல்வேறு அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து தோகைமலை கடைவீதியில் ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகளுக்கு ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே முன்வந்து அகற்றி கொள்வதற்கு ஊராட்சி நிர்வாகம் சார்பாக நோட்டீஸ் அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு கடைக்காரர்கள் காலம் தாழ்த்தியதால் நேற்று காலை தோகைமலை இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன் தலைமையிலான போலீசார் பாதுகாப்போடு தோகைமலை ஊராட்சி நிர்வாகம் தங்களது பணியாளர்களை கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

Related Stories:

>