×

வில்வித்தை போட்டிகள் இந்தியாவுக்கு 2 வெண்கலம்

பாங்காக்: ஆசிய கோப்பை உலக ரேங்கிங் வில்வித்தை போட்டியில் நேற்று, இந்தியா 2 வெண்கலப் பதக்கங்கள் வென்றது. ஆசிய கோப்பை உலக ரேங்கிங் போட்டி நிலை 1 போட்டிகள், பாங்காக் நகரில் நடந்து வருகின்றன. 2ம் நாளான நேற்று நடந்த, ஆடவருக்கான காம்பவுண்ட் பிரிவு போட்டியில் இந்திய வீரர்கள் ரஜத் சவுகான், ரிஷப் யாதவ், உதய் கம்போஜ் ஆகியோர் அடங்கிய அணி, பூடானுக்கு எதிரான போட்டியில் 234-232 என்ற புள்ளிக் கணக்கில் வென்று வெண்கலப் பதக்கம் பெற்றது. மகளிர் ரீகர்வ் பிரிவு போட்டியில், ரூமா விஸ்வாஸ், கீர்த்தி, ரிதி போர் ஆகியோர் அடங்கிய இந்திய அணி, 5-1 என்ற புள்ளிக் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றது. ஆடவர் ரீகர்வ் பிரிவு போட்டியில் தேவாங் குப்தா, சுக்செய்ன் சிங், ஜுயல் சர்கார் அடங்கிய இந்திய அணி, மலேசிய அணியை, 5-1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. அதேபோல் மகளிர் காம்பவுண்ட் பிரிவு போட்டியில் இந்திய மகளிர் அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.

Tags : India ,BANGKOK ,ASIAN CUP WORLD RANKING ARCHERY TOURNAMENT ,Asian Cup World Ranking Tournament Level ,Bangkok City ,
× RELATED பிட்ஸ்