×

ராணிப்பேட்டை அடுத்த மணியம்பட்டு ஏரியில் குளிக்கச் சென்ற 3 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அடுத்த மணியம்பட்டு ஏரியில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஏரியில் மூழ்கி சிறுவர்கள் பார்த்திபன்(13), நித்தீஷ் (14) நித்தீஷ் (13) உயிரிழந்தனர். 3 சிறுவர்களின் உடல்களையும் மீட்டு சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் அருகே உள்ள திரு.வி.க. நகரை சேர்ந்த பார்த்திபன், நித்தீஷ் நித்தீஷ் ஆகிய தனியார் பள்ளி மாணவர்கள் மணியம்பட்டு ஏரியில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்றதையடுத்து ஒருவர் பின் ஒருவராக நீரில் மூழ்க தொடங்கினர்.

அப்போது மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஏரிக்கு சென்று மாணவர்களை மீட்டனர். பின்னர் அவர்களை சிப்காட் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது மாணவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுதொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிப்காட் போலீசார் 3 மாணவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவர்கள் நீராட சென்று நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெற்றோர்களிடையேயும், அப்பகுதி மக்களிடையேயும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Ranipet Lake ,Ranipet ,Parthipan ,Nitish ,Chipcat police ,
× RELATED ஈரான் எரிசக்தி நிலையங்கள் மீது...