- புங்குனி உத்ரா ஃபிளாஜெல்லேஷன்
- வேம்பனபதி முருகன் கோயில்
- கந்தர்வகோட்டை
- பாங்குனி உத்திரா
- முருகன் கோயில்
- பகுனி உத்திரா திருவிழா
- சுப்பிரமணியர் முருகன் கோயில்
- கந்தர்வகோட்டை ஒன்றியம்
- புதுப்பட்டி ஓராட்சி வேம்பபதி
- புத்தாண்டு விழா
கந்தர்வகோட்டை, மார்ச் 25: கந்தர்வகோட்டை அருகே முருகன் கோயிலில் பங்குனி உத்திர கொடியேற்று விழா நடைபெற்றது. கந்தர்வகோட்டை ஒன்றியம், புதுப்பட்டி ஊராட்சி வேம்பன்பட்டி கிராமத்தில் உள்ள சுப்பிரமணியர் முருகன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா நடைபெறுவது வழக்கம்.
நிகழாண்டு திருவிழாவை முன்னிட்டு கந்தர்வகோட்டை சிவன் கோயிலில் உள்ள சுப்பிரமணியர் முருகன் உற்சவர் சிலை அலங்கரிக்கப்பட்ட பல்லாக்கில் பக்தர்கள், கிராமத்தினர்களால் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக அக்கச்சி பட்டி, மட்டங்கால், சிவன் தான்பட்டி, மளிகை நத்தம் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக சென்றது. சுவாமிக்கு ஆங்காங்கே பக்தர்கள் தேங்காய் உடைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் துவங்கி பங்குனி திருவிழா ஏப்ரல் 1ம்தேதி அன்று நடைபெறும்.
