×

கமுதியில் கொசு ஒழிப்பு பணி தீவிரம்

கமுதி, பிப்.17: கமுதி பேரூராட்சி பகுதி முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. செயல் அலுவலர் இளவரசி முன்னிலையில் புகை மருந்து அடித்து முதிர் கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடைபெற்றது. மேலும்  பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று கொசுப்புழு ஒழிப்பு பணி மேற்கொண்டனர். நீர்நிலைகளில் குளோரினேசன் செய்தல், டெங்கு காய்ச்சல் கண்காணிப்பு பணி, நிலவேம்பு கசாயம் வழங்குதல் மற்றும் ஒட்டுமொத்த துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பொண்ணுபாக்கியம், சுகாதார ஆய்வாளர் சதீஷ்குமார், துப்புரவு மேற்பார்வையாளர் வினோத்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Kamuthi ,
× RELATED முத்தையாபுரத்தில் பேருந்து கண்டக்டரை தாக்கிய இருவர் கைது