×

உணவகத்தில் திடீர் தீ விபத்து

திண்டிவனம், மார்ச் 25: திண்டிவனம்-மயிலம் சாலையில் ஜக்காம்பேட்டை பகுதியை சேர்ந்த சங்கர் என்பவர் உணவகம் நடத்தி வருகிறார். நேற்று காலை உணவகம் வழக்கம் போல் இயங்கியது. இந்நிலையில் வெயிலின் தாக்கத்தை குறைக்க இரும்பு தகர கொட்டகைக்கு மேல் அமைக்கப்பட்ட கீற்று கூரை அமைப்பில் புகை போக்கியின் வழியாக தீ பொறி பட்டு தீ பிடித்ததாக கூறப்படுகிறது. தீ முழுவதும் பரவி தீப்பிடித்து எரிந்த நிலையில் தகவலறிந்து சென்ற திண்டிவனம் தீயணைப்பு துறையினர் உடனடியாக போராடி தீயை அணைத்தனர். மேலும் கூரை அமைப்பு முற்றிலும் தீக்கிரையான நிலையில் உணவக பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் எந்தவித பாதிப்பும் இன்றி தப்பினர்.இதுகுறித்து உணவக உரிமையாளர், திண்டிவனம் நகர காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Tindivanam ,Shankar ,Jakkampettai ,Tindivanam-Mayilam road ,
× RELATED ரிப்பன் மாளிகை வளாகத்தில் செயல்படும்...