×

தனியார் பேருந்தில் பயணித்த ஆந்திராவை சேர்ந்த நபரிடம் இருந்து உரிய ஆவணம் இல்லாத ரூ.14 லட்சம் பணம், 17 சவரன் நகை பறிமுதல்

வேலூர்: வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செங்குன்றம் பேருந்து நிறுத்தத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது ஆந்திர மாநிலம் பலமனேரியிலிருந்து குடியாத்தம் நோக்கி வந்த தனியார் பயணிகள் பேருந்தில் சோதனை செய்தபோது பலமனேரி பகுதியை சேர்ந்த சீனிவாசலு என்பவர்உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற 14 லட்சத்தி 28 ஆயிரத்து 330 ரூபாய் ரொக்க பணம் மற்றும் 17 சவரன் தங்க நகைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து கே.விகுப்பம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர். பிடிபட்ட பணம் மற்றும் நகை பலமனேரி சேர்ந்த நகை கடை உரிமையாளரது என்றும் ஆர்டர் கொடுத்த நகையை வழங்க வந்த போது பிடிபட்டதாக கூறப்படுகிறது. மேலும் 10 லட்சத்திற்கு மேல் உள்ளதால் நகை மற்றும் பணத்தை வேலூர் வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Tags : Andhra Pradesh ,Vellore ,Vellore District K. ,BALMANERI ,PALMANERI ,
× RELATED அம்பாசமுத்திரத்தில் பறக்கும் படை...