ஈரான் மீது அமெரிக்கா போர் நடத்தும் என்றும் தற்போது தாக்குதலை நிறுத்தும் என்றும் ஆன்லைனில் சூதாட்டம் நடைபெற்றது. அமெரிக்காவில் பாலி மார்க்கெட், கால்சி ஆன்லைன் சூதாட்ட தளம் மூலம் பணம் கட்டி பலகோடி பேர் லாபம் பார்த்துள்ளனர். பிப்.28-க்கு முன்னரே ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என பந்தையம் கட்டி சிலர் பலகோடி டாலர் வென்றுள்ளனர். வெனிசுலா அதிபர் மதுரா, பதவியில் இருந்து அகற்றப்படுவார் என ஆன்லைனில் பந்தயம் கட்டி சிலர் பல கோடி சம்பாதித்துள்ளனர். மார்ச் 31-க்குள் டிரம்ப் போர் நிறுத்தத்தை அறிவிப்பார் என்று 70,000 டாலர் பந்தயம் கட்டிய ஒருவர் 8,20,000 டாலர் வென்றுள்ளார்.
