ராசிபுரத்தில் ₹1.50 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் துவக்கம்

ராசிபுரம், பிப்.17: ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் சரோஜா கலந்து கொண்டு, திட்டப்பணிகளை துவக்கி வைத்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.

அப்போது அமைச்சர் சரோஜா பேசுகையில், கிராமப் பகுதிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் தமிழக அரசு செய்துள்ளது. முதலமைச்சர் அறிவித்துள்ளபடி நீண்ட காலமாக அரசு நிலத்தில் குடியிருந்து வரும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு வருகிறது. நாமகிரிப்பேட்டை அருகே நாரைக்கிணறு பகுதியில் வசித்து வரும் விவசாயிகளுக்கு, அவர்களது நிலங்களை அளவீடு செய்து விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Stories:

>