- தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகம்
- மாவட்ட தேர்தல் அதிகாரி
- தஞ்சாவூர்
- தமிழ்நாடு சட்டப் பேரவை பொதுத் தேர்தல்
- மாவட்டம்
- இந்திய தேர்தல் ஆணையம்
- தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்…
*மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் நடைபெற்றது
தஞ்சாவூர் : தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலுக்காக தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குலுக்கல் முறையிலான முதல் தேர்வு மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலுக்காக தஞ்சாவூர் மாவட்டத்திற்கென ஒதுக்கப்பட்டுள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர மேலாண் (EMS 20) மென்பொருள் வாயிலாக குலுக்கல் முறையில் அனைத்து சட்டமன்ற தொகுதி வாரியாக பிரிப்பதற்கான முதல் தேர்வு (First Randomization) நடந்தது.
தஞ்சாவூர் மாவட்டத்திற்கென நியமிக்கப்பட்ட தேர்தல் பொதுபார்வையாளர்கள் மேற்பார்வையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் நேற்று மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள தேர்தல் கணிணி அறையில் நடைபெற்ற தேர்வுக்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார்.
இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், உதவி ஆட்சியர் (பயிற்சி) கார்த்திக் ராஜா மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்களும் பங்கேற்றனர்.
