×

திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்: திருமாவளவன் பேட்டி

 

சென்னை: திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 200க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் தேர்தல் பணியை முன்னெடுப்போம். கூட்டணியின் வெற்றியை முன்னிறுத்தி அனைத்து கோணங்களிலும் நல்லது, கெட்டதை சீர்தூக்கி பார்த்தோம். இடதுசாரி அரசியலை பாதுகாக்க போராடக்கூடிய இயக்கங்களுக்கு திமுக 18 தொகுதிகளை வழங்கியுள்ளது. வி.சி.க. -10, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 8 என மொத்தம் 18 தொகுதிகள் ஒதுக்கியதை அவ்வாறே பார்க்கிறேன். மேலோட்டமாக பார்த்தால் எண்ணிக்கை குறைவாக தோன்றும், ஆனால் வெற்றி இலக்கை நோக்கியே உடன்பாடு; திமுகவுடனான தொகுதி உடன்பாட்டில் மனநிறைவு என்று கூறினார்.

Tags : DIMUKA ALLIANCE ,THIRUMAWALAVAN ,Chennai ,Vishak ,Thirumavalavan ,Dimuka Coalition ,
× RELATED தமிழக பாஜகவில் கோஷ்டி பூசல்...