×

ஜார்க்கண்டில் 8 நக்சல்கள் கைது

ஹசாரிபாக்: ஜார்க்கண்டில் தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த 8 நக்சல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜார்க்கண்டின் ஹசாரிபாக் மாவட்டத்தில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் உரிமாரி காவல் சாவடி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சோதனை நடத்தினார்கள். வீரர்கள் நடத்திய தீவிர சோதனையின்போது 8நக்சல்கள் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து இரண்டு துப்பாக்கிகள், ஒரு நாட்டுத்துப்பாக்கரி, ஏழு செல்போன்கள், 130 தோட்டாக்கள், ஒரு வாகனம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட நக்சல்கள் பிப்ரவரி 12ம் தேதி ராம்கர் மாவட்டத்தில் உள்ள பத்ராத்து பகுதியில் மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தபோது நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரும் தடை செய்யப்பட்ட அமைப்பான திரிதிய சம்மேளன் பிரஸ்துதி கமிட்டியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Naxals ,Jharkhand ,Hazaribagh ,Humari police station ,
× RELATED அனைத்து மாநில முதலமைச்சர்களுடன்...