×

மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சியில் ஏராளமானோரை பங்கேற்க செய்ய கூடலூர் ஒன்றிய திமுகவினர் முடிவு

கூடலூர், பிப். 17: கூடலூர் ஒன்றிய திமுக அலுவலகத்தில் ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஒன்றிய அவைத் தலைவர் மூர்த்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் லியாக்கத்அலி வரவேற்றார். மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் செல்வரத்தினம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஒன்றிய துணை செயலாளர்கள் பாபு, காந்தி செல்லதுரை, பேரூர் செயலாளர் மாதேவ், முருகையா, மாவட்ட பிரதிநிதிகள் சிரிராஜா, சுப்பிரமணி, கணேசன் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மேட்டுப்பாளையத்தில் வரும் 19ம் தேதி பங்கேற்கும் நிகழ்வில் ஒன்றிய திமுக சார்பில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது. முடிவில் மாவட்ட பிரதிநிதி கணேசன் நன்றி கூறினார்.

Tags : DMK ,Cuddalore ,MK Stalin ,
× RELATED கடலூர் பெண் இறப்பு குறித்து பொய்யான...