×

கோவை - கீழ்குந்தா அரசு பஸ் நேரம் மாற்றம்

ஊட்டி, பிப். 17:   கோவையில் இருந்து முள்ளி வழியாக இயக்கப்படும் கீழ்குந்தா - கோவை பேருந்து தாமதமாக இயக்கப்படுவதால் கிராமப்புறங்களுக்கு செல்லும் மக்களுக்கு பஸ்கள் கிடைக்காமல் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஊட்டியில் இருந்து பகல் 12 மணிக்கு மஞ்சூர், கீழ்குந்தா, கெத்தை, முள்ளி, காரமடை வழியாக கோவைக்கு ஒரு பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ் மாலை 5.25 மணிக்கு கோவை புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு காரமடை, முள்ளி வழியாக கீழ்குந்தாவிற்கு இரவு 9 மணிக்குள் வந்தடையும். கோவையில் இருந்து மஞ்சூர் மற்றும் மஞ்சூரை சுற்றியுள்ள கிராம மக்கள் இந்த பஸ்சில் வந்து, தங்களது கிராமங்களுக்கு அரசு பஸ்கள் மற்றும் தனியார் வாகனங்கள் மூலம் சென்று விடுவார்கள். ஆனால், தற்போது இந்த பேருந்தின் நேரம் மாற்றப்பட்டு மாலை 5.45 மணிக்கு கோவை புதிய பஸ் நிலையத்தில் இருந்து கீழ்குந்தா நோக்கி செல்கிறது.

கவுண்டம்பாளையம் பகுதியில் பாலம் கட்டும் பணிகள் நடந்து வரும் நிலையில், மாற்றுப்பாதையில் இந்த பஸ் இயக்கப்படுவதால் மிகவும் தாமதமாக இரவு 10.30 மணிக்கு மேல் மஞ்சூர் வந்தடைகிறது. இதனால், சுற்றுப்புற கிராமங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. தனியார் வாகனங்கள் கூட ஏதும் இல்லாத நிலையில், கிராமப்புறங்களுக்கு நடந்தே செல்ல வேண்டியுள்ளது. கரடி, சிறுத்தை மற்றும் காட்டு மாடுகளின் தொல்லை அதிகரித்துள்ளதால், கிராமப்புற மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Tags : Coimbatore ,Government ,Lower Kunda ,Bus Time Change ,
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...