×

சென்னை, சுற்றுவட்டார பகுதிகளில் பறவை காய்ச்சல் பரவும் நிலையில் வழிமுறைகளை பின்பற்ற சுகாதாரத்துறை ஆணை

சென்னை: சென்னை, சுற்றுவட்டார பகுதிகளில் பறவை காய்ச்சல் பரவும் நிலையில் வழிமுறைகளை பின்பற்ற சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் அடுத்தடுத்து 20-க்கும் மேற்பட்ட கொக்கு மற்றும் நாரை வகை பறவைகள் உயிரிழந்தன. உயிரிழந்த பறவைகளை ஆய்வு செய்ததில், அவற்றுக்கு H5N1 வகை ‘பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருந்தது உறுதி

இதனை அடுத்து சென்னை சுற்றுவட்டாரப் பகுதி மக்கள், பறவைகள், விலங்குகளைக் கையாளும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை கூறியுள்ளது. தமிழகத்தில் இதுவரை மனிதர்களுக்குப் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இல்லை. மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள்:

  • காய்ச்சல், இருமல், சளி, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்
  • இறைச்சிக் கூடங்களில் பணிபுரிபவர்கள், பண்ணைத் தொழிலாளர்கள் முகக்கவசம், கையுறைகள், பூட்ஸ் காலணிகள் அணிவது கட்டாயம்
  • பண்ணைகளில் கிருமிநாசினிகளைத் தெளித்துச் சுத்தமாக வைத்திருக்கவும், இறைச்சிக் கழிவுகளைப் பொதுவெளியில் கொட்டக் கூடாது
  • மக்கள் முழுமையாகச் சமைக்கப்படாத முட்டை, இறைச்சி வகைகளை உண்பதைத் தவிர்க்க வேண்டும்
  • ஏதேனும் பகுதிகளில் பறவைகள் அசாதாரணமாக உயிரிழந்து கிடந்தால், கால்நடை பராமரிப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்
  • நோய் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம், கூடுதல் தகவல்கள், ஆலோசனைகளுக்கு 104 என்ற அவசர எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்
Tags : Department of Health ,Chennai ,Kindi Children's Park ,
× RELATED அமெரிக்காவில் இருந்து நெதர்லாந்து...