×

20 லிட்டர் மினரல் வாட்டர் கேன் விலை ரூ. 45-ல் இருந்து ரூ. 55ஆக உயர்வு : மார்ச் 15ம் தேதி முதல் விலை உயர்வு அமலுக்கு வந்தது!!

சென்னை :தமிழ்நாட்டில் மினரல் வாட்டர் கேன் விலை ரூ.3 முதல் ரூ.5 வரை உயர்ந்துள்ளது. மூலப்பொருட்கள், மின்சார கட்டணம் விலை உயர்வால் மினரல் வோட்டர் கேன் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து போர் நடத்தி வரு ம்நிலையில், பிளாஸ்டிக் மூலப்பொருள்கள் தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், பிளாஸ்டிக் பாட்டில்கள் விலை உயர்ந்துள்ளது. மூலப் பொருட்களின் விலை 40% உயர்ந்துள்ளது. இதனால், குடிநீர் பாட்டில்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

அதன்படி, கடந்த வாரம் வரையில் ரூ. 8-க்கு விற்கப்பட்ட 200 மி.லி. குடிநீர் பாட்டில் இன்று ரூ. 10-க்கும், ரூ.10-க்கு விற்கப்பட்ட 300 மி.லி. குடிநீர் பாட்டில் ரூ. 12-க்கும், ரூ.12-க்கு விற்கப்பட்ட 500 மி.லி. குடிநீர் பாட்டில் ரூ.16-க்கும், ரூ. 20-க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் பாட்டில் ரூ.25-க்கும், ரூ. 30-க்கு விற்கப்பட்ட 2 லிட்டர் பாட்டில் ரூ.35-க்கும், ரூ. 50-க்கு விற்கப்பட்ட 5 லிட்டர் பாட்டில் ரூ. 70 என்ற அளவிலும் உயர்ந்துள்ளது.

மேலும், மீண்டும் பயன்படுத்தக்கூடிய கேன்களில் அடைக்கப்பட்ட 20 லிட்டர் குடிநீர் ரூ. 45-ல் இருந்து ரூ. 55-க்கு உயர்த்தப்பட்டுள்ளது.சுத்திகரித்து, அடைக்கப்பட்ட குடிநீர் வழங்கும் 1,840 நிறுவனங்கள் விலை உயர்வை நடைமுறைப்படுத்தியுள்ளன. கடந்த 15ம் தேதி முதல் விலை உயர்வு அமலுக்கு வந்தது என்று அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Tags : Chennai ,Tamil Nadu ,US ,Israel ,Iran ,
× RELATED தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்...