×

மேலச்செவலில் அதிமுக ஆலோசனை கூட்டம்

வீரவநல்லூர், பிப். 16:  சேரன்மகாதேவி  ஒன்றிய அதிமுக, கோபாலசமுத்திரம், மேலச்செவல், பத்தமடை, சேரன்மகாதேவி, மற்றும் வீரவநல்லூர் பேரூர் கழகத்திற்கும்  உட்பட்ட நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் மேலச்செவலில் நடைபெற்றது. நெல்லை மாவட்ட செயலாளரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான தச்சை கணேசராஜா தலைமை வகித்து, நெல்லை மாவட்டத்திற்கு 18ம்தேதி தேர்தல் பிரசாரத்திற்கு வருகை தரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகையை முன்னிட்டும், வருகிற 24ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் விழா குறித்தும், வருகின்ற சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்தும் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
இதில் முன்னாள் எம்எல்ஏ தர்மலிங்கம், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கூனியூர் மாடசாமி, பொதுக்குழு உறுப்பினர் செவல் முத்துசாமி, ஒன்றிய செயலாளர் கருத்தப்பாண்டி, பேரூர் செயலாளர்கள் கோபாலசமுத்திரம் திருமலைநம்பி, மேலச்செவல் முருகன், பத்தமடை சங்கரலிங்கம், சேரன்மகாதேவி பழனிகுமார், வீரவநல்லூர் சுப்பிரமணியன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.

Tags : AIADMK ,meeting ,upper house ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...