×

வெறுப்பை பரப்பும் அரசியல் கட்சி ஐடி விங்: நிவேதா பெத்துராஜ் சாடல்

 

சென்னை, : தமிழ் மற்றும் தெலுங்கு பட உலகில் மிகவும் அறியப்பட்ட நடிகையாக இருப்பவர் நிவேதா பெத்துராஜ். அவர் நேற்று வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சியின் ஐடி விங்கை கடுமையாக சாடியுள்ளார். அதில், ‘‘உங்களின் ஐடி விங் வெறுப்பையும், தவறான தகவல்களையும், தனிப்பட்ட தாக்குதல்களையும் அதிகரித்து கொண்டிருந்தால், அந்த பொறுப்பு, அக்கட்சியின் தலைவரையே சேரும்.

தலைமை என்பது பாரபட்சமானது அல்ல. தேர்தல் நெருங்கி வரும் சூழலில், இதுபோன்ற செயல்பாடுகள் மோசமான விளைவுகளை நோக்கி செல்லும்’’ என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் அந்த அரசியல் கட்சி எது, அந்த தலைவர் யார் என்பதை அவர் வெளிப்படையாக சொல்லவில்லை.

இந்நிலையில் தவெகவின் ஐடி விங் தான் இதுபோன்ற வெறுப்பை பரப்பி வருவதாக சொல்லப்படுகிறது. முன்னதாக விஜய்யின் விவாகரத்து விஷயத்தில் அவரது மனைவி சங்கீதா மற்றும் சில நடிகைகளை தவெகவின் விர்ச்சுவல் வாரியர்ஸ் சோஷியல் மீடியாவில் கடுமையாக தாக்கி வெறுப்பை பரப்பியது குறிப்பிடத்தக்கது. இதனால் நிவேதா பெத்துராஜ் மீது வெறுப்பை பரப்பியது தவெகவின் ஐடி விங்காக இருக்கும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Tags : Nivetha Pethuraj Chatal ,Chennai ,Nivetha Pethuraj ,X-site ,
× RELATED பெரம்பலூரில் ரூ.95,184 மதிப்புள்ள பாத்திரங்கள் பறிமுதல்