×

திருப்பதி வியாபாரி காரில் ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.5 லட்சம் பறிமுதல் வந்தவாசி அருகே பறக்கும் படையினர் அதிரடி திருச்சியில் இருந்து 240 கி.மீ தூரம் சிக்காமல்

வந்தவாசி, மார்ச் 21: திருச்சியில் இருந்து 240 கி.மீ தூரம் சிக்காமல் காரில் ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.5 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். வந்தவாசி சட்டமன்றத் தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர் குமார் தலைமையில் ஏட்டுக்கள் ராஜேஸ், கீர்த்தனா ஆகியோர் கொண்ட படையினர் நேற்று வந்தவாசி-திண்டிவனம் நெடுஞ்சாலை எஸ் காட்டேரி சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது திருச்சியில் இருந்து வந்தவாசி வழியாக திருப்பதி நோக்கி சென்ற காரை சோதனை செய்தனர். அதில் திருப்பதியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் வியாபாரி என்பவர் ஆவணம் இன்றி ரூ.5 லட்சம் கொண்டு வந்தது தெரியவந்தது. பின்னர் விசாரணை மேற்கொண்டதில் ஸ்ரீகாந்த் திருப்பதியில் வீடு கட்டுவதாகும், அதற்காக திருச்சியில் கிரைனைட் கல் வாங்குவதற்காக பணம் எடுத்துச் சென்றதாகவும் தெரியவந்தது. இதனை பறிமுதல் செய்து வந்தவாசி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயவேலிடம் ஒப்படைத்தனர். திருச்சியில் இருந்து வந்தவாசி 240 கிலோமீட்டர் தூரம் உள்ள நிலையில் எங்கும் சிக்காமல் வந்தவாசி சோதனை சாவடியில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

Tags : squad ,Tirupati ,Tiruchi ,Trichy ,
× RELATED பைக்கில் ஆவணமின்றி எடுத்து வந்த ரூ.1.19 லட்சம் பறிமுதல் ஆரணி அருகே