×

மாணவர்களுக்கு தேர்தல் தொடர்பான வினாடி வினா போட்டி கலெக்டர் தர்ப்பகராஜ் தொடங்கி வைத்தார் செய்யாறு அரசு கல்லூரியில் ‘100 சதவீதம் வாக்களிப்போம் உறுதிமொழி’

செய்யாறு, மார்ச் 18: செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் ‘என் வாக்கு என் உரிமை மற்றும் நூறு சதவிகித வாக்களிப்போம் உறுதிமொழி, மாணவர்களுக்கு இடையே தேர்தல் தொடர்பான வினாடி வினா போட்டிகளை நடத்திய கலெக்டர் தர்ப்பகராஜ் நூல்களை பரிசாக வழங்கி தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரியில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான தர்ப்பகராஜ் தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026 முன்னிட்டு 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார்.

தொடர்ந்து முதல் முறை வாக்காளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் வினாடி வினா நிகழ்ச்சியை கலெக்டர் தர்ப்பகராஜ் தொடங்கி வைத்து அதில் பங்கேற்று தேர்தல் தொடர்பான கேள்விகளை மாணவர்களிடம் கேட்டு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் நூல் வழங்கினார். தொடர்ந்து 100% வாக்களிப்பு ரங்கோலி மற்றும் தேர்தல் உறுதி மொழியினை மாணவர்கள் ஏற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் செய்யாறு சப் கலெக்டர் அம்பிகா ஜெயின், தொகுதி தேர்தல் பொறுப்பாளர் விமல்குமார், தாசில்தார் அசோக்குமார், கல்லூரி முதல்வர் கலைவாணி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Tags : Collector ,Tharpukaraj ,Government College ,Anna Government College of Art ,
× RELATED ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.69 ஆயிரம்...