×

ஈரான் போருக்கு கூடுதலாக ரூ.18 லட்சம் கோடி தேவை: அமெரிக்க ராணுவம்

வாஷிங்டன்: ஈரான் போருக்கு கூடுதலாக $200 பில்லியன் (ரூ.18 லட்சம் கோடி) தேவைப்படுவதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் கோரிக்கை விடுத்துள்ளார். போருக்கான செலவின கோரிக்கைக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தை அணுகியுள்ளோம், மோசமான நபர்களை கொல்ல ராணுவத்துக்கு கூடுதல் நிதி தேவைப்படுகிறது என பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட் ஹெக்சேத் தெரிவித்துள்ளார்.

ஈரான் ​மீது அமெரிக்க மற்​றும் இஸ்​ரேலிய படைகள் போர்தொடுத்​தன. இதற்​காக மிகப் பெரிய படையை அமெரிக்கா அனுப்​பியது. ஈரான் மீதான தாக்​குதல் கடந்த 20 நாட்​களுக்கு மேலாக தொடர்​கிறது. ஈரானில் ஏராள​மான இலக்​கு​களை குறி​வைத்து அமெரிக்கா தாக்​குதல் நடத்தி வரு​கிறது. சர்வதேச சமூகத்தை உலுக்கி வரும் இந்த போர். தற்போது அடுத்த கட்டத்தை எட்டி இருக்கிறது. அதாவது இரு தரப்பும் எண்ணெய் மற்றும் கியாஸ் நிறுவனங்களை குறிவைத்து தாக்க தொடங்கி உள்ளன.

இந்​நிலை​யில் அமெரிக்க ராணுவத் தலை​மையகம் ஈரான் போருக்கு கூடு​தலாக 200 பில்​லியன் டாலர் (ரூ.18 லட்​சம் கோடி) நிதி தேவை என கோரிக்கை விடுத்​துள்​ளது. இது மிக​வும் அதி​க​மான தொகையாகும். இந்த புதிய செல​வின கோரிக்​கைக்கு அமெரிக்கா நாடாளு​மன்​றத்​தில் ஆதரவு கிடைக்​குமா என தெரிய​வில்​லை. இது குறித்து அமெரிக்க பாது​காப்​புத்​துறை அமைச்​சர் பீட் ஹெக்​சேத் கூறுகை​யில், “இந்த தொகை​யில் மாற்​றம் ஏற்​படலாம். ராணுவத்​துக்கு தேவை​யான நிதியை உறுதி செய்ய நாடாளு​மன்​றத்தை அணுக உள்​ளோம். மோச​மான நபர்​களை கொல்ல ராணுவத்​துக்கு கூடு​தல் நிதி தேவைப்​படு​கிறது என கூறினார்.

Tags : Iran ,US military ,Washington ,Pentagon ,US ,US Parliament ,
× RELATED மேற்கு ஆசியாவில் போர் நீடித்து வரும்...