×

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்குக் குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையை பெற்றுத் தருவோம்: தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன் உறுதி

 

தூத்துக்குடி: விளாத்திகுளம் மாணவி கொலை வழக்குக் குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையை பெற்றுத் தருவோம் என தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன் உறுதி அளித்துள்ளார். வேடநத்தம் கிராமத்தில் பிளஸ் டூ மாணவி மார்ச் 10ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் விளாத்திகுளம் பிளஸ் டூ மாணவி கொலை வழக்கு தொடர்பாக தூத்துக்குடி எஸ்.பி. மதன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது; வேடநத்தம் கிராமத்தில் பிளஸ் டூ மாணவி மார்ச் 10ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். மாணவி கொலை வழக்கில் சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாணவி கொலை சம்பவம் நடந்தவுடன் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளியை தீவிரமாக தேடினோம். அறிவியல் பூர்வமான விசாரணை மற்றும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையிலேயே தர்ம முனீஸ்வரன் கைது செய்யப்பட்டுள்ளார். வெவ்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. கொலை நடந்த இடத்தை சுற்றியுள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளியை கைது செய்துள்ளோம். எந்தவித அழுத்தமும் இல்லாமல், முற்றிலும் அறிவியல் பூர்வமான விசாரணையில் தர்ம முனீஸ்வரனை கைது செய்துள்ளோம்.

ஏற்கனவே தண்டிக்கப்பட்டுள்ள கைதிகள், ஜாமீனில் வெளியே வந்த கைதிகள் என அனைவரையும் விசாரணைக்கு அழைத்தோம். வேடநத்தம் கிராமத்தில் வசிக்கும் 800 ஆண்களிடம் விசாரணை நடத்தினோம். ஒவ்வொரு விசாரணையையும் தனித் தனியாக, தனிப் படைகள் அமைத்து விசாரணை நடத்தினோம். 2,574 நம்பர்களுக்கான Call History பெற்று ஆய்வு செய்தோம். 461 குற்றவாளிகள் நடவடிக்கைகளை ஆராய்ந்து, அவர்கள் குற்றத்தில் ஈடுபடவில்லை என்பதை உறுதிப்படுத்தினோம். நேர்த்தியான தொழில்முறை விசாரணை மூலம் அனைத்தையும் ஒருங்கிணைத்து குற்றவாளியை கைது செய்துள்ளோம்.

விசாரணையில் ஈடுபட்ட காவலர்கள், ஆய்வாளர்கள் உள்பட ஓய்வின்றி அர்ப்பணிப்புடன் பணியாற்றினர். பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படத்தை பயன்படுத்துவது சட்டவிரோதம், விதிமீறி பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தபட்சம் 10 சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம். ஒவ்வொரு கிராமங்களிலும் சிறப்பு மகளிர் காவல் குழுக்கள் அணிவகுப்பு நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். பெண் காவலர்கள் மூலமாக கிராமப் புறங்களில் ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்படும்

குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும். எந்தவித அழுத்தத்துக்கும் ஆளாகாமல், அறிவியல் ரீதியாக விசாரணை நடத்தி, குற்றவாளியை கண்டுபிடித்துள்ளோம். கைது செய்யப்பட்ட நபரிடம் ரத்த மாதிரி எடுத்து டி.என்.ஏ. பரிசோதனை நடத்த ஆய்வகத்துக்கு அனுப்பி உள்ளோம். சந்தேகத்தின் பேரில் 5 பேரிடம் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி உள்ளோம். சிறுமி வன்கொடுமை கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று கூறினார்.

Tags : Vlathikulam ,Thoothukudi District ,S. B. Madan ,Thoothukudi ,Vednatam ,
× RELATED அமெரிக்க அமைச்சர்கள் வீடுகளின் மேல்...