×

விவசாய கடன் தள்ளுபடிபோல் குறுந்தொழில் முனைவோர் கடன் தள்ளுபடி செய்யப்படுமா?

கோவை, பிப். 16: கோவை பம்ப்செட் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பாளர் சங்கம் (கோப்மா) தலைவர் மணிராஜ் கூறியதாவது: கடந்த  10 வருடத்தில் இல்லாத அளவிற்கு மோட்டார் பம்ப்செட் மூலப்பொருட்களின் விலை  20  முதல் 50 சதவீதம் வரை அதிகரித்துவிட்டது. மூலப்பொருட்களை பதுக்கி வைத்து  செயற்கை விலையேற்றம் செய்யும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசின் சார்பில் விவசாய கடன்  தள்ளுபடி செய்யப்பட்டதை போல் குறுந்தொழில் முனைவோர்கள் கடன்களையும்  தள்ளுபடி செய்ய வேண்டும்.

தொழில் நகரான கோவையில் குறுந்தொழில்  முனைவோர்களின் பிரச்சனைகளை அரசுக்கு தெரிவித்து உரிய முறையில் உதவிகள் பெற,  தொழில் முனைவோர்களே சட்டமன்ற உறுப்பினராவது தான் தற்போதைய காலத்தின்  கட்டாயமாக உள்ளது. எனவே தொழில் முனைவோர் வலுவாக உள்ள இடங்களில்  வருகிற சட்டமன்ற தேர்தலில் குறுந்தொழில் முனைவோர்களை முன்னிருத்தி  போட்டியிட வைப்போம். இவ்வாறு மணிராஜ் கூறினார்.

Tags :
× RELATED மாநில அளவிலான சிலம்ப போட்டி: கோவை வீரர்கள் அசத்தல்