மும்பை : வளைகுடா நாடுகளில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் மீதான ஈரானின் தாக்குதலால் இந்திய பங்குச்சந்தைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,600 புள்ளிகளும் இந்திய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 480 புள்ளிகளும் சரிவடைந்துள்ளன. சென்செக்ஸ் 75,100 புள்ளிகளுடனும் நிஃப்டி 23,200 புள்ளிகளுடனும் வர்த்தகமாகி வருகிறது.
