×

சென்னையில் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர் சரிவு: நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி..!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2160 குறைந்து ஒரு சவரன் ரூ.1,14,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. மார்ச் மாதம் தொடங்கியதில் இருந்து தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 4-5 நாட்களாக தங்கம் விலை குறைந்து வருவது நகை பிரியர்களிடையே மகிழ்ச்சியையும் சற்று ஆறுதலையும் கொடுத்துள்ளது.

நேற்றைய தினம் (மார்ச்.18) சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1,16,560க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து ஒரு கிராம் ரூ.14,570க்கும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.275க்கும், ஒரு கிலோ ரூ.2.75லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்துக்கு கீழ் வந்திருக்கிறது.

இந்நிலையில் இன்று (மார்ச்.19) சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2160 குறைந்து ஒரு சவரன் ரூ.1,14,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.270 குறைந்து ஒரு கிராம் ரூ.14,300க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.265-க்கும், கிலோவுக்கு ரூ.10000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,65,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.820க்கும். சவரனுக்கு ரூ.6,500க்கும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Chennai ,
× RELATED வளைகுடா நாடுகளில் உள்ள எண்ணெய்...