×

அதிமுக-பாஜக இடையே தொகுதி பங்கீடு இறுதியாக உள்ள நிலையில் எடப்பாடி டெல்லி பயணம்

சென்னை: அதிமுக-பாஜக இடையே தொகுதி பங்கீடு இறுதியாக உள்ள நிலையில் எடப்பாடி டெல்லி செல்கிறார். 234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கான தேர்தல் ஏப்ரல் 23-ந்தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, கட்சிகள் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படவில்லை. பாஜக 30 தொகுதிகளை கேட்பதால் ஒப்பந்தம் கையெழுத்தாவதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனிடையே அதிமுக – பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பணிகளை மேற்கொள்ள தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் இன்று இரவு சென்னை வருகிறார்.

இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திடீரென டெல்லி பயணம் செல்கிறார். இன்று காலை 10 மணியளவில் டெல்லி புறப்படும் எடப்பாடி பழனிசாமி தொகுதி பங்கீடு தொடர்பாக அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அதிமுக – பாஜக தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Edappadi ,Delhi ,AIADMK ,BJP ,Chennai ,Tamil Nadu Assembly ,
× RELATED இந்தி எழுத்து அழிப்புப்...