×

தெலுங்கு, கன்னட மொழி பேசும் திராவிட உடன்பிறப்புகள் அனைவருக்கும் உளம் நிறைந்த உகாதி நல்வாழ்த்துகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

 

சென்னை: தெலுங்கு, கன்னட மொழி பேசும் எனதருமைத் திராவிட உடன்பிறப்புகள் அனைவருக்கும் உளம் நிறைந்த உகாதி நல்வாழ்த்துகள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

யுகாதி தென் இந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகையாக கருதப்படுகிறது. இது புத்தாண்டாக மட்டுமின்றி, புதிய வாழ்க்கையின் துவக்க நாளாகவும் கருதப்படுகிறது. யுகாதி பண்டிகையை நண்பர்கள், உறவினர்கள், குடும்ப உறுப்பினர்களுடன் ஒன்றிணைந்து உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வார்கள்.

தெலுங்கு மற்றும் கன்னட புத்தாண்டான யுகாதி அல்லது உகாதி பண்டிகை மார்ச் 19ம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. புத்தாண்டு பிறக்கும் இந்த நாளில் சில குறிப்பிட்ட விஷயங்களை செய்வதால் செல்வ செழிப்பு ஏற்படும் என்பது நம்பிக்கை. யுகாதி என்பது யுகம் ஆதி ஆகிய இரண்டு சொற்களின் சேர்க்கையே ஆகும். அதாவது யுகம் தோன்றிய நாள் என்பது இதற்கு பொருள்.

புராணங்களின் படி, பிரம்ம தேவர் இந்த நாளில் தான் பிரபஞ்சத்தை படைக்க துவங்கினார் என நம்பப்படுகிறது. யுகாதியை இந்து புத்தாண்டாக வட இந்தியாவில் கொண்டாடுவது உண்டு. வாழ்வில் பழைய கசப்பான அனுபவங்கள், கஷ்டங்கள் ஆகியவற்றை மறந்து, புதிதாக துவங்க வேண்டும் என உணர்த்துவதே யுகாதி பண்டிகையின் நோக்கமாகும்

இந்நிலைலியில் தெலுங்ககு மற்றும் கன்னட மொழி பேசும் எனதருமைத் திராவிட உடன்பிறப்புகள் முதலமைச்சர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில் தெலுங்கு, கன்னட மொழி பேசும் எனதருமைத் திராவிட உடன்பிறப்புகள் அனைவருக்கும் உளம்நிறைந்த உகாதி நல்வாழ்த்துகள்!

மொழித்திணிப்பு, பண்பாட்டுப் படையெடுப்பு, நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு, தொகுதி மறுவரையறை பாதிப்பு என ஒன்றிய பா.ஜ.க. அரசு நம் மேல் தொடுத்திடும் தாக்குதல்களை எல்லாம் நம் ஒற்றுமையால் வெல்வோம்_ஒன்றாக. இந்த உகாதி புதிய எழுச்சிக்கு வழிவகுக்கட்டும்! திராவிட மாடல் 2.0 அமையட்டும் என்று பதிவிட்டுள்ளார்.

Tags : First Minister ,K. Stalin ,Chennai ,Yukathi ,South India ,
× RELATED அதிமுக-பாஜக இடையே தொகுதி பங்கீடு...