×

நாகை எஸ்பி அலுவலகத்தில் புகார் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நாகை, பிப். 12: 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை தாசில்தார் அலுவலகம் முன் அரசு ஊழியர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பொருளாளர் அந்துவன்சேரல் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார். தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயலாளர் சித்ரா, கிராம சுகாதார செவிலியர் சங்க மாநில பொது செயலாளர் ராணி, கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் செல்வராஜ், ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் பறிக்கப்பட்ட அகவிலைப்படி, சரண்டர், ஜிபிஎப் வட்டி குறைப்பு ரத்து ஆகியவற்றை உடனே வழங்க வேண்டும். அரசு துறையில் காலியாக உள்ள 4 லட்சத்து 50 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. கடந்த 9 நாட்களாக தொடர்ந்து அரசு ஊழியர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். 10வது நாளான நேற்று நாகை தாசில்தர் அலுவலகம் முன் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறை:
மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன் தமி ழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட இணை செயலாளர் நடராஜன் தலைமை வகித்தார். இதில் திரளானோர் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினரும் பங்கேற்றனர். ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் பழனிசாமி தலைமையில் ஓய்வூதியர்கள் பங்கேற்றனர்.

Tags : servants ,office ,Naga SP ,
× RELATED தேசிய குடிமை பணியாளர்கள் நாள் முதல்வர் வாழ்த்து