×

சதுரகிரி கோயிலுக்கு செல்லும் மலைப்பாதையில் இறந்து கிடக்கும் காட்டுமாடு: அப்புறப்படுத்த பக்தர்கள் கோரிக்கை

 

வத்திராயிருப்பு: விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இந்த சிவத்தலத்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினசரி வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அமாவாசை, பிரதோஷம் உள்ளிட்ட முக்கிய விஷேச தினங்களில் பக்தர்கள் கூட்டம் களைகட்டும். இந்நிலையில், தாணிப்பாறை அடிவாரப் பகுதியில் இருந்து கோயிலுக்குச் செல்லும் மலைப்பாதையில், சங்கிலிப்பாறை ஓடை அருகே, காட்டுமாடு ஒன்று இறந்து கிடக்கிறது.

உடல் முழுவதும் அழுகிய நிலையில் தலை மட்டுகே எஞ்சி உள்ளது. துர்நாற்றம் வீசுவதால் மலைப்பாதை வழியாக கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. சங்கிலிப்பாறை ஓடையில் வரும் தண்ணீரை பக்தர்கள் குடிக்கவும், குளிக்கவும் பயன்படுத்துவதால், இறந்த கிடக்கும் காட்டுமாடு உடலை அப்புறப்படுத்த வத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : CHADURAGIRI TEMPLE ,Chaturagiri Sundaramakalingam ,Virudhunagar district ,Tamil Nadu ,Sami Darshan ,Amavasai ,Pradosham ,
× RELATED இந்தி பேசாத எம்.பி.க்களுக்கு நதியல்...