திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயிலில் தை அமாவாசை சிறப்பு பூஜை

திருத்துறைப்பூண்டி, பிப்.12: திருத்துறைப்பூண்டி பிறவிமருந்தீஸ்வரர் கோயிலில் முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைவதற்கு தை அமாவாசையை முன்னிட்டு கஜசம்ஹாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து மக்கள் வழிபட்டனர்.

கஜசம்ஹாரமூர்த்திக்கு அமாவாசை நாட்களில் அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டால் முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைவதுடன் வாழ்க்கையில் முன்னேற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தமிழகத்தில் திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயிலில் மட்டுமே ஒரே கல்லிலால் ஆன கஜசம்ஹாரமூர்த்தி சிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>