×

முத்துப்பேட்டை அருகே குண்டும் குழியுமாக சேதமான சங்கேந்தி-தேவதானம் சாலை

திருத்துறைப்பூண்டி, பிப்.12: முத்துப்பேட்டை அருகே குண்டும் குழியுமாக சேதமடைந்த சங்கேந்தி-தேவதானம் சாலையால் வாகனஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். முத்துப்பேட்டை ஒன்றியம் சங்கேந்தியிலிருந்து தேவதானம் செல்லும் சாலை சேதமடைந்து பல ஆண்டுகளாக ஆகிறது. தற்போது சாலை முழுவதும் கப்பி கற்கள் பெயர்ந்து பொதுமக்கள் நடந்து கூட போக முடியவில்லை. சாலை சேதம் குறித்து பொதுமக்கள் அரசுக்கு பலமுறை கோரிக்கை மனு அனுப்பி எந்த பலனும் இல்லை. இது குறித்து எடையூர் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் மேட்டுக்கோட்டகம் சண்முகம் கூறிகையில். இந்த சாலை தார்ச்சாலை அமைத்து 5 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். இந்த சாலை வழியாக பெருகவாழ்ந்தான், மன்னார்குடிக்கு செல்லலாம். சங்கேந்தி-எடையூர் சென்று திருத்துறைப்பூண்டி-முத்துப்பேட்டைக்கு செல்லலாம். இந்நிலையில் சாலை சேதம் அடைந்து வாகன ஒட்டிகள், பொதுமக்கள், மாணவர்கள் பெரிதும் சிராமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக அவசர தேவைக்கு எடையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வாகனங்களில் பொதுமக்கள் செல்லமுடியாமல் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே மக்கள் நலன்கருதி சங்கேந்தி-தேவதானம் சாலையை சீரமைக்க வேண்டும் என்றார்.

Tags : road ,Sankendi-Devadanam ,Muthupet ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி