விடியலை நோக்கி மு.க ஸ்டாலின் குரல் நாமக்கல்லுக்கு 14ம் தேதி கனிமொழி எம்பி வருகை

நாமக்கல், பிப்.12: விடியலை ேநாக்கி மு.க.ஸ்டாலின் குரல் நிகழ்ச்சியையொட்டி, வருகிற 14ம் தேதி நாமக்கல் மாவட்டத்தில் கனிமொழி எம்பி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இது குறித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஸ்குமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் வரும் 14ம்தேதி, திமுக மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்பி, விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்டு பொதுமக்கள், விவசாயிகள், லாரி உரிமையாளர்களுடன் கலந்துரையாடுகிறார். 14ம் தேதி காலை 8 மணிக்கு ராசிபுரம் நகரில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து பழைய பேருந்து நிலையத்தில் உள்ள ஜிபிஆர் சிலைக்கு மாலை அணிவித்து, மக்கள் மத்தியில் அவர் பேசுகிறார்.காலை 8.40 மணிக்கு நாமகிரிப்பேட்டைஒன்றியம் வெங்கச்சங்கல் மேட்டில் கட்சி கொடியேற்றி வைத்து பேசுகிறார். தொடர்ந்து, நாமகிரிப்பேட்டையில் கட்சியின் மூத்த முன்னோடி தமிழகனை சந்தித்து பேசுகிறார். பின்னர் சீராப்பள்ளி பேரூர் அருந்ததியர் மக்கள் 500 பேர் முன்னிலையில் கட்சி கொடி ஏற்றி வைக்கிறார்.

காலை 10 மணிக்கு நாமகிரிப்பேட்டைஒன்றியத்தில் 1000 பெண்கள் கட்சியில் இணைகிறார்கள். தொடர்ந்து, முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் 500 மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார். அத்தனூரில்  2000 விசைத்தறி நெசவாளர்களுடன் பிள்ளாநல்லூர் சந்தையில் காய்கறி வியாபரிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடுகிறார். மதியம் 2.30 மணிக்கு காளப்பநாயக்கன்பட்டியில் திமுக ஒன்றிய செயலாளர் அசோக்குமார் தோட்டத்தில் 1000 விவசாயிகளுடன் கலந்துரையாடுகிறார். பின்னர் குப்பநாயக்கனூரில் கட்சி கொடிஏற்றுவிழா, மாலை 4.15 மணிக்கு, நாமக்கல் சேலம் ரோட்டில் உள்ள லாரி உரிமையாளர் சங்க அலுவலகத்தில், லாரி சங்க உறுப்பினர்களுடன் கலந்துரையாடுகிறார். இதை தொடர்ந்து நாமக்கல் முல்லை நகரில், திமுக மாநில மகளிரணி, தொண்டரணி இணை செயலாளர் ராணி வீட்டில், மகளிரணி மற்றும் தொண்டரணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்களை சந்தித்து கனிமொழி எம்பி பேசுகிறார். இரவு 7 மணிக்கு மணிக்கு தோப்பூர் கொங்கு திருமணமண்டபத்தில் நடைபெறும், ஒன்றிய திமுக பொறுப்பாளர் நவலடி இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.இவ்வாறு ராஜேஸ்குமார் தெரிவித்தார்.

Related Stories:

>