மாஸ்கோ: உக்ரைன் ராணுவம் ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவை குறிவைத்து சுமார் 250 டிரோன்கள் மூலம் மிகப்பெரிய வான்வழி தாக்குதலை நடத்தியது. அந்த டிரோன்களை ரஷ்ய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான வான்வழி மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைன் ஏராளமான டிரோன்களை ஒரே நேரத்தில் ஏவியது.
உக்ரைன் ஏவிய 250 டிரோன்களை ரஷ்ய வான் பாதுகாப்பு படைகள் இடைமறித்து அழித்ததாக மேயர் செர்ஜி சோபியான் தெரிவித்தார். இதற்காக மாஸ்கோ நகர மக்கள் சார்பில் ராணுவத்துக்கு நன்றி தெரிவிப்பதாக மேயர் கூறியுள்ளார். டிரோன் தாக்குதலால் மாஸ்கோ உள்ளிட்ட முக்கிய ரஷ்ய விமான நிலையங்கள் நேற்று சிறிது நேரம் மூடப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
