×

ஒர்லியான்ஸ் மாஸ்டர்ஸ் பேட்மின்டன் சாதனை படைப்பரா ஸ்ரீ காந்த், கிரண் ஜார்ஜ்?

 

ஒர்லியான்ஸ்: ஒர்லியான்ஸ் மாஸ்டர்ஸ் பேட்மின்டன் போட்டிகளில் இன்று இந்தியாவை சேர்ந்த ஸ்ரீ காந்த் கிடாம்பி, கிரண் ஜார்ஜ், தருண் மன்னெபள்ளி உள்ளிட்ட முன்னணி வீரர்களும், வீராங்கனைகளும் களம் காண்கின்றனர். பிரான்ஸில் நடைபெறும் முக்கியத்துவம் வாய்ந்த பேட்மின்டன் போட்டிகளில் ஒன்றாக ஒர்லியான்ஸ் மாஸ்டர்ஸ் திகழ்கிறது.

ஒர்லியான்ஸ் நகரில் இன்று துவங்கும் இப்போட்டிகளின் ஆடவர் பிரிவு போட்டி ஒன்றில் இந்தியாவை சேர்ந்த நட்சத்திர வீரர் ஸ்ரீ காந்த் கிடாம்பி, டென்மார்க்கை சேர்ந்த மேக்னஸ் ஜோஹனசன் உடன் மோதுகிறார். மற்றொரு போட்டியில் இந்திய வீரர் கிரண் ஜார்ஜ், ஜப்பான் வீரர் கென்டா நிஷிமோடோ உடன் களம் காண்கிறார். தவிர ஆயுஷ் ஷெட்டி, தருண் மன்னெபள்ளி, மிதுன் மஞ்சுநாத், சுப்ரமணியன் உள்ளிட்டோரும் இன்றைய போட்டியில் முதல் சுற்றில் களம் காண உள்ளனர்.

மகளிர் பிரிவு ஒற்றையர் போட்டி ஒன்றில் இன்று, இந்திய வீராங்கனைகள் ஆகர்ஷி காஷ்யப் – ஸ்ரீ யன்ஷி வாலிஷெட்டி களம் காண்கின்றனர். மற்றொரு போட்டியில் இந்திய வீராங்கனை ரக்சிதா ராம்ராஜ், ஜப்பான் வீராங்கனை மனாமி சுய்ஸு உடன் மோதுகிறார். இன்னொரு போட்டியில் இந்திய வீராங்கனை தான்வி சர்மா, தாய்லாந்து வீராங்கனை சுபனிதா கதெதாங் உடன் மோதவுள்ளார். மேலும், இந்திய வீராங்கனைகள் மாளவிகா பன்சோட், அன்மோல் கார்ப் உள்ளிட்டோரும் இன்றைய போட்டிகளில் ஆடவுள்ளனர்.

Tags : Srikanth ,Kiran George ,Orleans Masters ,Orleans ,Srikanth Kidambi ,Tarun Mannepalli ,France ,
× RELATED பெங்களூரு சின்னசாமி மைதானத்தில்...