×

உக்ரைன் ராணுவம் அதிரடி; ரஷ்யா மீது 170 டிரோன் தாக்குதல்: விமான நிலையங்கள் திடீர் முடக்கம்

 

மாஸ்கோ: கடந்த காலங்களில் ரஷ்ய எரிசக்தி மற்றும் போக்குவரத்து கட்டமைப்புகளை சிதைக்கும் நோக்கில் உக்ரைன் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தது. இதன் தொடர்ச்சியாக, கடந்த வார இறுதியில் ரஷ்ய அதிபர் புதின் தலைமையிலான படைகள் 430 டிரோன்கள் மற்றும் 68 ஏவுகணைகளை உக்ரைன் மீது ஏவி தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த வான்வழி மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், நேற்று நள்ளிரவில் உக்ரைன் ஏவிய 170 டிரோன்களை ரஷ்ய வான் பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியது. இதில் தலைநகர் மாஸ்கோவை நோக்கி வந்த 27 டிரோன்களும் அடங்கும். இந்த தாக்குதலால் மாஸ்கோவின் நுக்கோவோ மற்றும் கலகா விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பிரையன்ஸ்க், பெல்கோரோட், ஸ்மோலென்ஸ்க் மற்றும் ரோஸ்டோவ் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பிராந்தியங்களில் இந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் குறித்து உக்ரைன் ராணுவம் கூறுகையில், ‘ரஷ்ய ராணுவத்திற்கு எரிபொருள் வழங்கும் கிராஸ்னோடர் பகுதியில் உள்ள அபிப்ஸ்கி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் காவ்காஸ் துறைமுகம் ஆகியவற்றை இலக்காக வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது’ என்று தெரிவித்துள்ளது. எனினும், இந்த தாக்குதலில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என ரஷ்ய அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

Tags : Ukraine ,Russia ,Moscow ,Mint ,
× RELATED ஆர்எஸ்எஸ், ரா அமைப்புக்கு...